மாத்தறை திஸ்ஸமகாரமை வீதியில் 142 வது மைல் கல்லைத் தாண்டி சிறிது தூரம் போன பின் சந்திக்கும் தெகிகஹலந்த மகா வித்தியாலயத்தை அண்மித்த பாதையில் 1 கி.மீ. போனபோது கொடவாய கோடபப்பத விகாரைக்கு போகலாம்.
வலவே கங்கையின் மகத்துவாரத்தை அண்மித்து அமைந்த கொடவாய விகாரை கி.மு. 2 ம் நூற்றாண்டில் உருகுனையில் ஆட்சி செய்த கோடாபய எனும் அரசனால் செய்வித்ததென மதிக்கப்படுகின்றது. இந்த பூமியில் உள்ள 2 ம் நூற்றாண்டிற்கு சேர்மதியான I வது கஜபா அரசனின் (கி.பி. 112 – 134) கொடவாய கல்வெட்டின் படி அண்மித்திருந்த கொடபவத துறைமுகத்தின் வரிகள் விகாரைக்கு அர்ப்பணித்துள்ளது. இந்தப் பிரதேசத்தில் புரான துறைமுகம் இருந்ததற்கான ஒரே தடயம் இந்த கல்வெட்டாகும். இந்த பூமியில் செய்த அகழ்தல் ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்த ரோமன் நாணயங்கள், மற்றும் பிரநாட்டு நாணயங்களை கொண்டு பார்க்கும் போது இந்த இடம் முக்கியமான வியாபார தளமாக ஊர்ஜிதப்படுகின்றது. கோடபப்பத விகாரையின் எஞ்சியுள்ள தடயங்களாக கல்வெட்டுத் தூண்கள், தூண்களின் பாதங்கள், செங்கட்டிச் சின்னங்கள் போன்றவையினால் இந்த இடத்தின் பழமையை அறிய முடியும். இங்குள்ள கல்வெட்டுகளினாலும் கட்டிடக்கலை அழகினாலும் இவ்விடத்திற்கு குறைவில்லாத அரச அனுக்கிரகம் கிடைத்த விகாரையாக இருந்திருக்கின்றதை தெரிய வருகின்றது.