யட்டால விகாரை

ஆம்பாந்தொட்டை - திஸ்ஸமகாராமை பாதையில் திஸ்ஸமகாராமை தூபியிலிருந்து அம்பாந்தொட்டை பக்கத்திற்கு ஒரு மைல் தொலைவில் தெபரவெவ எனுமிடத்தில் யட்டால விகாரைக்கு பிரவேசிக்க முடியும். இது திஸ்ஸமகாராமை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்ததாகும்.

மக்கள் பேச்சுவழக்கத்தின் தடயங்களின் படி கி.மு. 3 ம் நூற்றாண்டில் மகாநாக யுவராஜா உருகுனைக்கு ஓடிப் போகையில் அவரின் அரசியார் மகனைப் பெற்ற இடம் ஞாபகார்த்தமாக இந்த இடத்தில் கோபுரத்தை செய்வித்து அரிட்ட எனும் தேரருக்கு அர்ப்பணம் செய்த விகாரை இந்த யட்டால விகாரையாகும். தாதுவம்ச எனும் நூலின் விபரங்களின் படி மகாநாக அரசன் இந்த விகாரை  நிர்மானித்துள்ளார். யட்டால தூபி பேணிப் பாதுகாக்கும் பணிகளின்போது பிரஹ்மி எழுத்துகளுடனான செங்கட்டிகள், அடதேஸ்த கணக எனும் அரைவாசியான மாணிக்க கற்கள் பதித்த நான்கு பேழைகள் இந்த இடத்திலிருந்து கிடைத்துள்ளது. யட்டால தூபியை அண்மித்துள்ள கற் தூண்கலுள்ள மேடுகளும் கட்டிடச் சுவர்களில் உள்ள தடயங்கள் கொண்டு பார்க்கும் போது இந்த விகாரை மிகவும் பழமையில் பெரிய ஆச்சிரமமாக இருந்ததென அறிந்துள்ளது.

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 09:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது