ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் கலபெத்த கிராமத்தில் அமைந்துள்ளது.
மோனராகலை பொத்துவில் பாதையில் 2 வது மைல் கல்லை அண்மித்து இதைக் காணக் கிடைக்கின்றது.
புரான நீர் அகழியும் மதிலாலும் சுற்றியுள்ள மாளிகைக் கட்டிடம் ஒன்று இங்கு காணக் கிடைக்கின்றது. அம்பாறை ரஜகல பிரதேச நிர்வாகிக்குச் சேர்மதியான மாளிகையாகலாமென நம்பப்படுகின்றது. தூண்கள், அத்திவாரக் கற்கள் பெருமளவு கிடைத்ததோடு இந்த மாளிகையின் சிதைவுகள் பொலன்னறுவை மாளிகைக்கும் பன்டுவஸ்நுவர மாளிகைக்கும் சமமாக இருந்தாலும் அவைகளைவிட அளவில் சிறியதாகும். ஒரே காலத்து கட்டிடமாகும் இதை புரானத்தில் உதுன்தொர எனும் பெயரையும் உபயோகித்துள்ளார்கள். புரான தாதுகோபுரத்தினதும் சிலை மண்டபத்தினதும் எச்சங்கள் இங்கு காணக் கிடைக்கின்றது.