ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவில் கெப்பெடிபொல கிராம அலுவலர் பிரிவில் கெப்பெடிபொல கிராமத்தில் அமைந்துள்ளது.
வெலிமடையிலிருந்து கண்டி வீதியில் 8 கி.மீ. பயணம் செய்வதால் இந்த இடத்திற்கு போக முடியும்.
கெப்பெடிபொல அதிகாரியினால் தனது படைகளை ஆயத்தம் செய்தல், போர்களுக்கான செயற்பாடுகளுக்கு இந்த இடத்தை உபயோகித்ததென மக்களின் பேச்சு வழக்கில் உள்ளது. அது போலவே இங்கு குதிரைகளை தங்க வைத்த இடமாகவும் குறிப்பிடுகின்றது. எப்படியாயினும் குதிரைகளை கட்டி வைப்பதற்கு என நம்பப்படும் சுவரில் கொளுக்கிகள் போன்றவையின் தடையங்கள் காணக் கிடைக்கின்றது.
இந்தக் கோட்டையின் முன்பக்க சுவர்கள் 18 அங்குலம் தடிப்பாக இருக்குமிடையில் அங்கு உட்பிரவேசிப்பதற்கு சிறிய வில்வளைவான வாசலாகும். இருபக்க சுவர்கள் மிக உயரமானவையாகும். இந்த சுவர்கள் இரு பக்கத்திற்கு சரிந்துள்ளதோடு சுவர்கள் வெடித்துள்ளது. இந்தக் கோட்டையின் மத்தியில் தற்சமயம் நெசவாலையென்று நடத்தப்படுகின்றது.
மில்சன் தென்ன, டிகியா தென்ன, பாலுகம எனும் பெயர்களும் இந்த இடத்திற்கு உபயோகித்துள்ளார்கள். தொல்லியல் திணைக்களத்தினால் சுவர்கள் தண்ணீரால் கழுவிக் கொண்டு போவதை தடுப்பதற்கு பாதுகாத்தல் செய்ததோடு பாதுகாக்கப்பட்ட சின்னமாக பிரகடனப்படுத்தியுள்ளது.