முகப்பு Sites போகொட பாலம்

போகொட பாலம்

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் ஹாலிஎல நகரத்திலிருந்து கலஉட எனும் பாதையில் ஜகுல்ல சந்திக்கு 2 மைல் மேற்கே உள்ள போகொட ரஜமகா விகாரைக்கு போவதற்குள்ள பாலமாகும். குல்லந்த எனும் ஆற்றின் குறுக்கே உள்ள இந்தப் பாலம் மரத்திலானதோடு கண்டி யுகத்து கலையாக பிரதிபலிக்கின்றது. மலை உச்சியில் உள்ள கிராமத்திலிருந்து வரும் மக்களுக்கு ஆற்றைக் கடந்து வசதியாக விகாரைக்கு போவதற்கு இந்த பாலம் நிர்மானித்துள்ளது. பாலத்தின் இருபுரமும் கைப்பிடி இரண்டு நிர்மானித்துள்ளது. ஒரு பக்கத்திற்கு 10 வீதமாக இரு பக்கத்திற்கும் 20 தூண்களின் மேல் பாலத்தின் கூரை நிர்மானித்துள்ளது. பாலம் 50 அடி நீளமும் 06 அடி அகலமும் 08 அடி உயரமும் ஆகும். ஊவா மாகாணத்தின் மிக விசேட அமைப்பான இதை அனேகமானோர் "அம்பலம் பாலம" எனச் சொல்வார்கள். (தங்குமடம் பாலம்)