ஸ்ரீ மகா போதியாவிற்கு வடக்கு பக்கமாக அமைந்த இந்த தாதுகோபுரம் துட்டகைமுனு அரசனால் செய்வித்ததென மகா வம்சத்தில் சொல்லப்படுகின்றது. இலக்கிய நூல்களில் ரத்னமாலி, மகாசாய, ஸ்வர்னமாலி, ருவன்வெலி எனும் விதவிதமான பெயர்களில் அறிமுகமாகும் இதில் புத்தரின் தாதுக்கள் அடக்கம் செய்து கட்டியதினால் மகாதூபியாகவும் சொல்லப்படுகின்றது. புத்த பெருமான் உபயோகப்படுத்திய இடமென்று மகிந்த தேரர் காண்பித்த இடமாகும்.
அதைத் தவிர மகா விகாரைத் தொகுதிக்குள் ரங்சிமாலகய, சதுஸ்சாலாவ, ஜன்தாகர, குளம், குஜ்ஜதிஸ்ஸ தூபி, பஞ்சாவாச பிரிவெனாககள் உட்பட சிதைவுகள் சின்னங்கள் அனேகவற்றை காண முடியும.