ஆம்பலந்தொட்டை – ரிதியகம பாதையில் 16 மைல் அளவு பயணம் செய்த பின் கரம்பகல அரன்ய சேணானனைக்கு (ஆச்சிரமம்) பிரவேசிக்க முடியும். சூரியவெவ பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்ததாகும்.
சிரி மேகவன்ன அரச காலத்தை (கி.பி. 303 – 331) சார்ந்த கல்வெட்டில் பிலிவ(ன) விகாரையாகவும் இந்த விகாரையை அறிமுகம் செய்துள்ளது. தாது வைக்கும் பேழையாக தூரத்திற்கு தெரிகின்ற படியால் கரன்டுலென எனும் பெயரும் பாவித்ததாக மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது.
புரான பிரஹ்மி கல்வெட்டுகள் அதிகளவு இந்த பூமியில் உள்ளதோடு தற்சமய மக்களின் தலையீட்டுதலினால் அனேக குகைகளுக்கு புதுப்புது அம்சங்கள் சேர்த்துள்ளது. விசுத்தி மார்க எனும் நூலில் குறிப்பிடும் சித்தகுப்த எனும் தேரர் அறுபது வருடங்கள் வசித்த குருந்தக எனும் குகை இங்கு அமைந்ததாக நம்பப்படுகின்றது. இந்த குகையின் பூச்சுவின் மேல் சிகப்பு நிறத்திலான சித்திரங்களின் எச்சங்கள் இப்போதும் உள்ளது.