புராதன ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் தொல்பொருட் சின்னங்களுக்கு இயற்கையாகவோ வேறு காரணங்களின் பேரிலோ ஏற்படுகின்ற பொலிவு குன்றுதலைக் குறைப்பதற்காக இரசாயன மற்றும் பௌதீகப் பரிகாரங்களைச் செய்தல். தொல்பொருளியில் திணைக்களத்தின் இரசாயண பாதுகாப்புப் பிரிவின் பிரதான கடமையாகும். அதன் மூலமாக புராதன ஓவியங்கள், சிற்ப்ங்கள் மற்றும் சின்னங்களின் ஆயுட் காலத்தை நீடித்து எதிர்காலச் சந்ததியினருக்காக பாதுகாப்பதே எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை தொல்பொருளியில் திணைக்களம் 1890 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 1940 ஆம் தசாப்தம் வரை இரசாயணப் பாதுகாப்புப் பிரிவொன்று இருக்கவில்லை. 1940 ஆம் தசாப்சத்தின் ஆரம்ப காலகட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற சீகிரியா சுவரோவியங்களின் சாந்துக்கலவை பலவீனமடைந்து அழிந்துவிடும் அபாயம் தோன்றியதோடு அதனைப் பலப்படுத்துவதற்கான சிறப்பறிஞரொருவர் தீவில் இருக்கவில்லையென்பதால் 1943 சனவரி 27 ஆம் திகதி இந்திய தொல்பொருளியில் திணைக்களத்தின் இரசாயனவியலாளர் திரு. கான் பஹதூர் மொஹமட் சானா உல்லா இந்நாட்டுக்கு வருகை தந்து சீகிரியா சுவரோவியங்களை முன்னிலை மீட்புச் செய்தார். இவரால் திரு. பீ. தொன் அம்புறூஸ் இரசாயணப் பாதுகாப்புப் பணிகளுக்காக பயிற்றப்பட்டதோடு தொல்பொருளியில் திணைக்களம் இவ்விதமாகவே இரசாயணப் பாதுகாப்பு பணிகளில் காலடி எடுத்து வைத்தது.
திரு. கான் பஹதூர் மொஹமட் சானா உல்லா இந்திய தொல்பொருளியில் திணைக் களத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் மீண்டும் 1947 ஏப்றில் 13 ஆம் திகதி இலங் கைக்கு வந்து அவ்வாண்டின் ஆகஸ்ட் மாதம் வரை இந்நாட்டின் சுவரோவியங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இவ்வைபவத்தின் போது பொலநறுவை திவங்க சிற்பக் கூடத்தைப் பாதுகாக்கும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கியதோடு அதற்கு மேலதிகமாக பொலநறுவை லங்காதிலக சிலைக்கூடம், கல்விஹாரை, புள்ளிகொட மற்றும் ஹிந்தகல ஆகிய இடங்களின் ஓவியங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்நாட்டுச் சுவரோவியங்களின் பாதுகாப்புத்துறையின் மேம்பாட்டுக்காக மாபெரும் பங்களிப்பினை வழங்கினார்.
1949 நவம்பர் 01 ஆம் திகதி இரசாயனப் பாதுகாப்புப் பணிகளுக்காக முதற்தடவையாக தொல்பொருளியில் திணைக்களத்திற்கு இரசாயனவியலாளர் ஒருவர் சேர்த்துக் கொள்ளப் பட்டார். பயிலுநர் இரசாயனவியலாளராக இவ்விதமாக திணைக்களத்தின் பாதுகாப்புப் பிரிவுக்கு சேர்ந்து கொண்ட திரு. ஆர். எச். த சில்வா இந்திய தொல்பொருளியில் இரசாயனவியலாளரின் கீழ் இந்தியாவின் டேராதுன் எனும் இடத்தில் பயிற்சி பெற்றார்.
அதேவேளையில் 1950 ஆம் ஆண்டளவில் மீண்டும் சீகிரியா சுவரோவியங்களின் சாந்துக்கலவை பலவீனமடைந்து பொலிவிழக்கக் தொடங்கியமையால் திரு. சானா உல்லாவின் கீழ் பணியாற்றி அனுபவம் பெற்றிருந்த திணைக்களத்தின் மாதிரிப் படம் வரைஞரான திரு. சரத் வத்தல அதற்கான பரிகாரம் காண்பதில் வெற்றியடைந்தார்.
1953 ஆம் ஆண்டில் முதற்றடவையாக தொல்பொருளியல் திணைக்களத்திற்காக பாதுகாப்பு இரசாயன ஆய்வுகூடமொன்று கொழும்பு சங்கீத, நடன நிறுவகத்தின் கட்டடத்தில் நிறுவப்பட்டது. 1950 - 60 ஆம் தசாப்தத்தில் மெதுவாக முன்னேற்றமடைந்த இந்த இரசாயன ஆய்வுகூடம் சுவரோவியங்களின் பாதுகாப்புக்கு மேலதிகமாக திறந்த வெளியில் உள்ள புராதன தூபிகளில் பங்கசு மற்றும் களைகளின் கட்டுப்பாடு சாந்துக்கலவை முன்னிலை மீட்பு, தொல்பொருள் பாதுகாப்பு, புதிய பாதுகாப்பு வழிமுறைகளுக்கான பரீட்சித்துப் பார்த்தல் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், கற்சாசனங்களின் பிளாஸ்ரிக் மாதிரியுருக்களை அமைத்தல் போன்ற பணிகள் வரை தனது பணிகளை விரிவாக்கியது. பாதுகாப்பு இரசாயன ஆய்வுகூடம், கொழும்பு தொல்பொருளியில் திணைக்கள தலைமையக வளவில் அமைந்துள்ள நிகழ்கால இரசாயன ஆய்வுகூட கட்டடத்திற்கு 1970 தசாப்தத்தின் ஆரம்ப காலகட்டத்திலேயே கொண்டு வரப்பட்டது.
1967 ஆம் ஆண்டின் ஒக்டோபர் 14 ஆம் திகதி இரவு தொல்பொருளியல் திணைக்களத்திற்கு தனது வரலாற்றில் மிகவும் கடுமையான சவாலை எதிர்நோக்க நேரிட்டது. எவரேனும் ஒருவர் அன்றைய தினம் இரவு உலகப் பிரசித்தி பெற்ற சீகிரியா சுவரோவியங்களின் மீது வர்ணப் புச்சு பூசி அழித்தார். இது முழு உலகினையும் பரபரப்பில் ஆழ்த்திய சம்பவமாக அமைந்ததோடு இந்த வர்ணப்பூச்சிகளை அகற்றி சீகிரியா சுவரோவியங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் சவால் திணைக்களத்தின் இரசாயனப் பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. கலாநிதி ஆர். எச். த சில்வா அவர்களை முதன்மையாகக் கொண்ட பாதுகாப்பு அணியொன்றினால் இத்தாலிய சிறப்பறிஞரான திரு. லூசியானோ மரன்சியின் வழிகாட்டலின் கீழ் பாரிய பிரயத்தனத்தின் பின்னர் சீகிரியா சுவரோவியங்கள் ஒட்டு மொத்தமான மனிதகுலத்திற்காகவும் பாதுகாத்துக் கொடுக்கப்பட இயலுமானதாக அமைந்தமை இரசாயனப் பாதுகாப்புப் பிரிவு பெற்ற தனித்துவமான வெற்றியாகும்.
அழிவடைந்த சீகிரியா சுவரோவியங்களை முன்னிலை மீட்கும் |
|
|
|
கலாநிதி திரு. ஆர். எச். த சில்வா | திரு. லூசியானோ மரன்சி |
முன்னிலை மீட்கப்பட்ட சீகிரியா சுவரோவியங்கள் |
||
|
|
|
இரசாயன பாதுகாப்புப் பிரிவின் கட்டமைப்பு
இரசாயன பாதுகாப்புப் பிரிவின் கடமைப்பொறுப்பு
இரசாயன பாதுகாப்பு தொடர்பான கீழே குறிப்பிடப்பட்ட சகலவிதமான பணிகளும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்புக் கோட்பாடுகள் மற்றும் ஒழுக்கநெறிகளுக்கு அமைவாக விஞ்ஞான ரீதியான பின்னணியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலதிக விபரங்களுக்காக தலைப்பின் மீது கிளிக் பண்ணுக.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்திலான படகுப்பாதையைப் பாதுகாத்தல்.
1992 ஆம் ஆண்டில் இலங்கையின் மேல்மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, லத்பந்துர எனுமிடத்தில் ஒரு கால்வாயில் இருந்து வெளிப்பட்ட பண்டைய மரத்திலான படகுப்பாதை பற்றிய தகவல் பகுதிவாழ் மக்களிடமிருந்து திணைக்களத் திற்குக் கிடைத்தது. மேற்கு அவுஸ்திரேலிய நூதனசாலையில் பாதுகாப்புச் சிறப்பறிஞரான திரு. இயன் கொட்பிறி; இலங்கைக்கு வந்து அப்போது தேடல் பிரிவின் உதவிப் பணிப்பாளராக விளங்கிய தற்போதைய தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் கலாநிதி (திரு) செனரத் திசாநாயக்கவுடன் மேற்படி ஓடத்தைப் பரிசீலனை செய்து பாதுகாத்து நிலைமை அறிக்கையையும் மதிப்பீடொன்றையும் தயாரித்தார். இது காபன் 14 கால நிர்ணயத்திற்கு உள்ளாக்கப்பட்டதோடு அதற்கிணங்க இது இற்றைக்கு ஏறக்குறைய 960 வருடங்கள் பழமை வாய்ந்ததென்பது உறுதிப்படுத்தப்பட்டது. நீரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதன் காரணமாக் உலர்ந்தமையால் அதிக வெடிப்புக்களுக்கு இலக்காகிய இந்த மரத்திலான படகுப்பாதையை இரசாயனப் பொருட்களைப் பாவித்து பாதுகாக்கும் பொருட்டு இரசாயனப் பாதுகாப்புப் பிரிவு விசேட கருத்திட்டமொன்றை அமுலாக்கியது. தற்போது இது பொதுமக்களின் காட்சிக்காக தயார் பண்ணப்பட்டு வருகின்றது.
மரப்பகுதி அழிவடைந்திருந்த விதம் | |
இயந்திரம் மூலமாக சுத்தம் செய்து |
|
பாதுகாக்கப்பட்ட பின்னர் பாதுகாக்கப்பட்ட படகுப்பாதையை தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் பரிசோதனை செய்தல் | |
பாதுகாக்கப்பட்ட மற்றுமொரு மரத்திலான படகுப்பாதை
இது இலங்கையின் மேல்மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல ஓயாவிலிருந்து 1998 மார்ச் மாதத்தில் மணல் கரைசேர்ப்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் பீட்டா எனலைசிஸ் நிறுவனம் மூலமாக காலநிர்ணயம் செய்யப்பட்ட இந்த படகுப்பாதை இற்றைக்கு ஏறக்குறைய 1270 ஆண்டுகள் பழமை வாய்ந்ததென வெளிக்கொணரப்பட்டது. கொழும்பு நூதனசாலையின் நீர்த்தொட்டியொன்றில் இது இடப்பட்டிருந்ததோடு 2008 ஆம் ஆண்டில் இலங்கை - நெதர்லாந்து கலாசார ஒத்து ழைப்புக் கருத்திட்டத்தின் மூலமாக நிதியேற்பாடு செய்யப்பட்டதன் காரணமாக இதன் பாதுகாப்புப் பணிகளை ஆரம்பிக்க இயலுமாயிற்று. மரத்தூள் பாவித்து நிர்வகிக்கப்படும் நிலைமையின் கீழ் காற்றில் உலர்த்தும் வழிமுறைக்கிணங்க பாதுகாக்கத் தீர்மானிக்கப்பட்து. சுருங்குதலைத் தடுப்பதற்காக எவ்விதமான இரசாயனப் பொருட்களும் பாவிக்;கப்படாத இந்த வழிமுறையானது மரபுரீதியான வழிமுறையாகும். நுண்ணங்கிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு போரிக் அமிலம் மற்றும் பொரெக்ஸ் பாவிக்கப்பட்டது. மரத்தூள் பாவனை மிகுந்த இலாபகரமான முறையைப் போன்றே மரத்தை மெதுவாக உலரத்;துவதால் உலர்த்தலின் போது சுருங்கும் அளவும் குறைவடையும். சுருங்கும் சதவீதம் தொல்பொருளியில் திணைக்களத்தினால் இடையறாமல் அவதானிக்கப்படும். இது தற்போது பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த தயார்செய்யப்பட்டு வருகின்றது.
பழைய பீரங்கியைப் பாதுகாத்தல்
போத்துகேயர் காலத்திற்குரியதாக கருதத்தக்க தொழில்நுட்ப பண்புகள் கொண்ட செம்பு கலந்த உலோகத்திலான பீரங்கியொன்று 2007 ஆம் ஆண்டில் கடலட்டை பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு எடுத்து வரப்படுகையில் புத்தளம் - முந்தல், பொலிசால் கைப்பற்றப்பட்டு தொல்பொருளியல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது இது லெப்டினன் கொமானடர் சோமசிறி தேவேந்திரவின் ஆலோசனைக்கிணங்கவும் 1976 நூலின் 140 ஆம் பக்கத்திலுள்ள குறிப்புக்கள் மற்றும் நிழற்படங்களுக்கிணங்க போர்த் துக்கேயர் காலத்திற்குரியதென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பீரங்கி இலங்கையின் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முந்தல் கடற்கரையில் இருந்து 15 கி. மீ. தொலைவில் கடற்பரப்பில் இருந்து கொண்டுவரப்பட்டது. சில மாதங் களாக புத்தளம் நூதனசாலை வளவிற்கு அதன் இரசாயனப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவே கொண்டுவரப்பட்டது. பாதுகாப்புப் பணிகளுக்காக நிதிசார் அனுசரணை இலங்கை – நெதர்லாந்து ஒத்துழைப்பு கருத்திட்டத்தின் கீழ் கலாசார அமைச்சினாலேயே வழங்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட பின்னர் இது காலி கோட்டையின் ஒல்லாதந்தர் கட்டடத்தில் நிறுவப்பட்ட மத்திய கலாசார நிதியத்தின் கடல்சார் தொல்பொருள் நூதனசாலையில் பொதுமக்களின் பார்வைக்காக வைப்புச் செய்யப் பட்டுள்ளது.
பீரங்கி பாதுகாக்கப்பட முன்னர் | |
புத்தளம் தொல்பொருளியல் நூதனசாலை வளாகத்தில் இரசாயனப் பொருட்களை இட்டு இயந்திரம் மூலமாக சுத்தம் செய்தல். |
ஒவாகிரிய புத்தர் சிலையைப் பாதுகாத்தல்
ஒவாகிரிய தொல்பொருளியல் நிலையம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அழிவுச்சின்னங்களாக காணப்பட்ட இடம் கல்லோயா பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபையின் கோரிக்கைக்கு இணங்க தொல்பொருளியில் திணைக்களத்தினால் 1956 ஆம் ஆண்டில் அகழ்ந்து வெளிக்கொணரப்பட்டது. இந்த அறிவுச் சின்னங்களின் பெரும்பகுதி கல்லோயா பள்ளத்தாக்கு அபிவிருத்தி செயற் றிட்டத்தின் போது டிரெக்டர்களால் அழிவடைந்திருந்தன. அழிவுச் சின்னங்களான தாதுகோபுரம், சிலைக்கூடம் மற்றும் கல்தூண்களின் தலைப்பகுதி, காவற்கல், படிக்கட்டு வரிசையின் இரு மருங்கிலும் உள்ள வளைந்த கற்கள், தட்டையான ஓடுகள் போன்ற கட்டடங்களின் எச்சங்கள் இங்கு பரந்து காணப்படுகின்றன. இவை மத்தியில் காணப்பட்ட ஏறக்குறைய 11 ½ அடி உயரமான பளிங்குச் சுண்ணக்கல்லினால் ஆக்கப்பட்ட இரு கைகளும் உடைந்த தலையில்லாத புத்தர்சிலை 2008 ஆம் ஆண்டில் தொல்பொருளியல் திணைக்கள்தின் இரசாயனப் பாதுகாப்பு பிரிவினால் பாதுகாக்கப்படல் தொடங்கப்பட்டது. பாதுகாத்தல் ஆரம்பிக்கும் தருணமாகும் போது கீழே சாய்ந்து தோள்பகுதி உடைந்து காணப்பட்ட சிலை விசேடமாகத் தயாரிக்கப்பட்ட மரத்திலான சட்டகம் மற்றும் கப்பியின் உதவியுடன் நிமிர்த்தி செங்குத்தாக நிறுவப்பட்டது.
கீழே சாய்ந்திருந்த தலையில்லாத சிலையை கம்பியின் உதவியுடன் நிறுவுதல். | சிலையின் பாதங்கள் இரண்டையும் கற்றூண் கலவையைக் கொண்டு மீளவும் உருவாக்குதல். |
தலைப்பகுதியை பொருத்திய பின்னர். | சிலை பாதுகாக்கப்பட்ட பின்னர். |
பண்டைய வடிவமைதி முறைகள் நிகழ்கால சமூகத்திற்கு
பண்டைய சமூகத்தின் ஆடை அணிகளையும் வடிவமைதி முறைகளையும் நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததியினருக்கு கண்டுகொள்ளச் செய்விப்பதை நோக்கமாகக் கொண்டு பழைய ஆடைவகைகளைப் பாதுகாக்கும் கருத்திட்டமொன்று இரசாயனப் பாதுகாப்புப் பிரிவு மூலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக தொல்பொருளியல் திணைக்களத்தின் கீழுள்ள பிரதேச நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பண்டைய ஆடைஅணிகளில் ஒருசில கபாகுருத்துகள் பாதுகாப்பிற்கு உள்ளாக்கப்பட்டன. கபாகுருத்து என்பது போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் கடற்கரையோரப் பிரதேசங்களில் நடுத்தர வகுப்புப் பெண்களால் பாவிக்கப்பட்ட ஒருவகை மேலாடையாகும். இது வெள்ளைப் பருத்திப் புடவையினால் முழுநிறைவு செய்யப்பட்ட நீளக்கையுடைய குறுகிய ரவிக்கை வகையினமாக அமைவதோடு கழுத்தைச் சுற்றியும் கைகள் மற்றும் இடுப்பைச் சுற்றியும் சரிகை பிடிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரவிக்கையின் முன்பாகமும் பின்பாகமும் தனிப் புடவையினால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆடை வடிவமைதி போர்;த்துக் கேயர் காலத்தின் பின்னர் ஒல்லாந்தர் காலம் மற்றும் பிரித்தானியர் காலம் வரையும் நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் குறிப்பாக தென்பிரதேசங்களில் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தது. நிகழ்காலத்திலும் தெற்கின் ஒருசில பிரதேசங்களில் இந்த வடிவமைதி எஞ்சியுள்ளது.
பாதுகாக்கப்பட முன்னர் | இரசாயனம் கொண்டு சுத்தம் செய்தல் |
உதவிச்சாதனங்கள் மூலமாக பலப்படுத்தப்படல் | பாதுகாக்ப்பட்ட பின்னர் |